பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு திறக்கப்பட்டன.இந்தியாவிலுள்ள 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 17 தீர்த்தங்களில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு பக்தர்கள் வசதிக்காக மகாலெட்சுமி தீர்த்தம் உட்பட 6 தீர்த்தங்களை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மகாலெட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி தீர்த்தங்கள் உட்பட 6 தீர்த்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. புதிய கிணறுகள் அமைக்கப்பட்டு, வேத முறைப்படி சிறப்பு ஆராதனைகளை நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, அந்தத் தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடிச் செல்கின்றனர்.
Discussion about this post