உத்தரபிரதேசத்தில் பல காலமாக நீடித்து வந்த ராமர் கோவில் பிரச்சனை முடிவுக்கு வந்தபின் அங்கு ராமர் கோவில் கட்டிடப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராமர் மற்றும் சீதையின் சிலையினை அமைக்க சீதையின் பிறப்பிடமான நேபாளத்தின் ஜானக்பூரிலி இருந்து புனித கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இக்கற்களுக்கு சாலிகிராம் என்று பெயர். மொத்தம் இரண்டு கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு கல் 18 டன் எடையிலும் மற்றொரு கல் 16 டன் எடையிலும் உள்ளது.
இந்த சாலிகிராம் கற்களானது ஜானக்பூரில் காலி சிந்தகி எனும் ஆற்றங்கரையில் அதிகளவு கிடைக்கிறது. இங்குள்ள ஜானகி கோவில் நிர்வாகமானது மேலேக் குறிப்பிட்ட இரண்டு புனித கற்களை அயோத்திக்கு அனுப்பியுள்ளது. இக்கற்களை இராமஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
Discussion about this post