ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சரணாலயங்களில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு அதிகளவில் நீர் தேங்கியுள்ளதால் வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தங்கல், மேல செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரைக்கோட்டை உள்ளிட்ட ஐந்து இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இங்குள்ள நீர்நிலைகளை நாடி லட்சக்கணக்கான பறவைகள் வந்து, ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி செல்கின்றன.ராமநாதபுரம் மாவட்ட பறவைகள் சரணாலயங்களில் நிரந்தரமாக பறவைகள் தங்கும் வகையில், தண்ணீர் தேக்கி வைக்க அரசு அனுமதி வழங்கியவுடன், வனத்துறையினர் அங்குள்ள அனைத்து பறவைகள் சரணாலயத்தையும் தூர் வாரியுள்ளனர். இதனால் மழைக் காலத்திற்கு முன்பே வெளிநாட்டு பறவைகள் குவியத் தொடங்கியுள்ளன. வனத்துறையினரரின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post