இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று நள்ளிரவு முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இம்மானுவேல் சேகரனின் 62 வது குருபூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று நள்ளிரவு முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையிலான நாட்களிலும், அதேபோல், அக்டோபர் 30 ஆம் தேதி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான நாட்களிலும் 144 தடை உத்தரவினை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பிறப்பித்துள்ளார். மேலும், இந்த நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை
வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழையவும் தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post