சென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் விளம்பரப் பதாகைகளை வைத்துள்ள தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐடிசி நிறுவனம் NEW IS COMING FOR THE NEXT GENERATION என்ற அறிவிப்புடன் சென்னை மாநகர் முழுவதும் விளம்பரங்கள் வைத்துள்ளது. புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை மீறும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டு இருப்பதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இளம் தலைமுறையினர் குறிப்பாக பள்ளி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Discussion about this post