தமிழகம், புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
இன்று மாலையின் பிற்பகுதியில் ரமலான் மாத பிறை உருவாகிறது என பிறை அறிவிப்பு வெளியானது. இதை தமிழக தலைமை காஜி சலாஹூத்தின் முகமது அயூப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பு வைக்க இஸ்லாமிய சகோதரர்கள் முடிவு எடுத்துள்ளனர். இதன் காரணமாக சூரிய உதயத்திற்குப் பின்னும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் இஸ்லாமியர்கள் உணவு நீர் ஆகியவற்றை அருந்துவதில்லை என்பது ஐதீகம்.
பின்னர், 30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர், தங்களின் உறவினர்கள், நண்பர்களுடன் சிறப்பாக விருந்து படைத்து ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் ஜூன் மாதம் 4-ம் தேதி ரமலான் திருநாள் கொண்டாடப்படலாம் என தெரிகிறது.
Discussion about this post