மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உயிரிழந்தார்

பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 95.

பாகிஸ்தானில் பிறந்த ராம் ஜெத்மலானி, பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் குடியேறினார். பாம்பே பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர், 17 வயதில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1996-ல் வாஜ்பாய் அமைச்சரவையில், மத்திய சட்டத்துறை அமைச்சராக ராம் ஜெத்மலானி இருந்துள்ளார். பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ள ராம் ஜெத்மலானி, வயது மூப்பு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர், இன்று காலமானார்.

Exit mobile version