இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து போரில் காணாமல் போன தங்களது உறவுகளை மீட்டத்தரக்கோரி கவனஈர்ப்பு பேரணி நடத்தினர்.
இலங்கையின் வவுனியா பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்று திரண்ட ஏராளமான தமிழர்கள், போரில் மாயமான தங்களது உறவுகளை மீட்டுத்தர சர்வதேச தலையீட்டினை கோரி இந்த பேரணியை மேற்கொண்டனர். போரில் மாயமானவர்கள் குறித்து சர்வதேச விசாரணையை இனியும் காலம் தாழ்த்தாது நடத்த வேண்டும் என்றும் கூட்டுப் புதைக்குழி ஆதாரங்களை அழிக்கவிடாமல் ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போரில் மாயமானவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியமாறு இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. மாயமான தங்களது உறவுகளை மீட்டுத்தரக்கோரி முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
Discussion about this post