நாடு முழுவதும் ரக் ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
சகோதரப் பாசத்தை வலியுறுத்தும் பண்டிகையான ரக் ஷா பந்தன் வட மாநிலத்தவரின் முதன்மை திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழு நிலவு நாளன்று, வடமாநிலப் பெண்கள் தாங்கள் சகோதர முறையில் அன்பு கொள்ளும் ஆண்களின் மணிக்கட்டுகளில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டிக் கொண்டாடுவர். மேலும் அவர்களுக்கு பிடித்த உணவுகளைச் சமைத்துப் பரிமாறுவதோடு பரிசுகளும் பகிர்வர். இந்நாளில் தங்கள் சகோதரர்கள் மட்டுமல்லாது, நாட்டின் மெய் நாயகர்களான ராணுவ வீரர்களுக்கும் ராக்கிக் கயிறு அனுப்பி அவர்களைப் பெருமைப்படுத்துவர் என்பது இவ்விழாவின் கூடுதல் சிறப்பாகும். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ராக்கிக் கயிறுகளின் விற்பனை மந்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post