ரக்சா பந்தன் என்பது சாதாரண ஒரு பண்டிகையாக கடந்து விட முடியாது. அது ஒரு பெண் சகோதரனாகக் கருதும் நபருக்கும் இடையே உள்ள உணர்வையும், பாசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய பண்டிகையாகவே உள்ளது.
மகாபாரதத்தில் விஷ்ணு போரில் போது காயம் அடைந்த போது . அவரின் கையிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி, தான் உடுத்தியிருந்த சேலையின் ஒரு பகுதியை கிழித்து, அதை கிருஷ்ணரின் காயமடைந்த பகுதியில் கட்டினார் இதனால் நெகிழ்ந்து போனார் கிருஷ்ணர். பாஞ்சாலியை தங்கையாக ஏற்றுக் கொண்ட கிருஷ்ண பகவான், பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று, திரெளபதியை துகிலுரிய முயன்ற போது, அவரின் மானத்தை காப்பாற்றினார். அப்படி திரெளபதி தன் சேலையை கிழித்து கட்டிய நிகழ்வை தற்போது ரக் ஷா பந்தனாக கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.இதற்கு மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆண்டு வந்தார். அப்போது குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற எண்ணி அதன் மீது போர் தொடுத்தார். அப்போது தன் நாட்டை காப்பாற்ற, கர்ணாவதி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ஒரு புனித நூல் அனுப்பி உதவியை கோரினார். பாச உணர்ச்சி கொண்ட ஹுமாயுன் கர்ணாவதிக்கு உதவ முன் வந்தார். இதனை நினைவுகூறும் விதமாகவும் ரக்சா பந்தன் நாள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில், இன்றைய நாள் ரக்சா பந்தன் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் யாரையெல்லாம் தங்களுடைய சகோதரர்களாக நினைத்து கொள்கிறார்களோ அவர்களின் கையில் நூல்கள் அல்லது மெல்லிய கயிறுகளை கட்டி விட்டு மகிழ்வார்கள். இந்த நூல் பல டிசைன்களில் பல பல கலர்களில் இப்போதெல்லாம் விற்பனைக்கு வந்து விட்டன. இப்படி தங்கள் கையில் கட்டிவிட்டுவிட்டால், அந்த சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என ஆண்கள் உறுதி எடுத்து கொள்வர். ஒரு பெண் தான் சகோதரனாகக் கருதும் நபருக்கும் இடையே உள்ள உணர்வையும், பாசத்தையும் தொடர்ந்து கடத்தக்கூடிய ஒரு உறவு பாலமாக இந்த ரக் ஷா பந்தன் கருதபடுகிறது..
Discussion about this post