முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தலாக் தடை மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மக்களவையில் நேற்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் அவைக்கும் வர வேண்டும் என அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post