கொரோனா நோய் தொற்றை குணப்படுத்தும் சிகிச்சைகளில் ஒன்றான பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், காய்ச்சல் அறிகுறியுடன் நோய் தொற்று ஏற்பட்டு அதன் பின் குணமடைந்தவர்களிடம் மட்டுமே பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என விளக்கம் அளித்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, பிளாஸ்மா தானம் செய்பவர்கள் சர்க்கரை நோய், புற்றுநோய், நுரையீரல் பிரச்சினை, உள்ளிட்ட எந்த நோயும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தற்போது, கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் ஒருவர், பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளதாக கூறிய அவர், பிளாஸ்மா தானம் செய்வது குறித்து, குணமடைந்து வீடு திரும்பியவர்களிடம் மருத்துவமனை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post