முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும், தங்கள் அமைப்புக்கு தொடர்பில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடீரென அறிவித்துள்ளது.
லண்டனில் இருந்து அந்த இயக்கத்தின் பெயரில், சட்டத்துறை பிரதிநிதி மற்றும் அரசியல் துறை பிரதிநிதி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைவிற்குப் பின்பும், அவரது புதல்வரான இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவைப் பேணி வந்துள்ளார் என்பதையும் நினைவூட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தகர்த்தெறியும் நோக்கத்தோடு இலங்கை அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவாகவே ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான ராஜீவ் காந்தி படுகொலைப் பழி உடனடியாக துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post