நீண்டகாலமாக இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது பாஜக தான் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியத்த அவர், தேர்தல் குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக கூறினார். ரஜினியின் அறிக்கை பாஜகவிற்கு ஆக்கமே தவிர தாக்கம் இல்லை என்றும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
Discussion about this post