ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர், அம்மன்றத்தின் மாவட்ட செயலாளர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, வரும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு உழைப்பதாக உறுதியளித்தனர்.
Discussion about this post