ராஜஸ்தானில் நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்ற 21 வயது இளைஞர், நாட்டிலேயே மிக இளம் வயதில் நீதிபதியானவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க்பிரதாப் சிங் ராஜஸ்தான் சட்டப் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து வந்தார். நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் படிப்பை நிறைவு செய்த அவர் நீதிபதிகளுக்கன தேர்வை எழுதினார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் மயங்க் பிரதாப் சிங் வெற்றி பெற்று நீதிபதியாகத் தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே மிக இளம் வயதில் நீதிபதியானவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மக்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றுவதே தனது லட்சியம் என மயங்க் பிரதாப் சிங் தெரிவித்தார்.
Discussion about this post