பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடந்த மாதம் 23ம் தேதி ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுட்டனர். இந்த கொள்ளையில் 600 சவரன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 11 தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த அணில் சிங் என்பவர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணயில் கள்ளிப்பாளையம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அணில் சிங்கை பல்லடம் அழைத்து வந்து விசாரித்த காவல்துறையினர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் இஷார்கான் என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் தங்க கட்டி, 600 கிராம் வெள்ளி மற்றும் 11 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post