இலங்கையின் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்றால் மீண்டும் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அச்சம் தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோத்தபய ராஜபக்சேஅதிகாரத்துக்கு வருவதாக இருந்தால் மரண ஊர்வலம் செல்வதற்காக அனைவரும் தூக்கு கயிற்றை தயார் செய்துகொள்ள வேண்டும் என கூறினார். பாதுகாப்பு செயலாளர் பதவியில் அவர் இருந்தபோது பாரபட்சமின்றி கொலைகளை செய்தவர் என்றும், அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இலங்கையில் மீண்டும் ரத்த ஆறு ஓடும் என மேர்வின் சில்வா அச்சம் தெரிவித்தார். கோத்தபய ராஜபக்சே கொடுங்கோல் ஆட்சியாளர்களான ஹிட்லர் மற்றும் முசோலினியை விட மிகவும் கொடூரமானவர் என்றும் எச்சரிக்கை விடுத்த சில்வா, யுத்த முனையில் இருந்து போரை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேக்காவுக்கு அதிபராவதற்கான வாய்ப்பை வழங்கலாம் எனக் குறிப்பிட்டார்.
Discussion about this post