இலங்கை அரசின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற போவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாத்தறை பகுதிக்கு வந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்ப்பதாக கூறினார். இந்த முடிவை இலங்கை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை கண்டித்து கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை ஈடுபட்டனர்.