தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்று கொள்கிறார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால், தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் பதவியேற்று கொள்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழக தலைமை தகவல் ஆணையராக இன்று பதவியேற்கும் ராஜகோபால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பதவில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post