புளியங்குடி தனியார் பள்ளி மாணவி தனது சேமிப்பு பணத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வரும் ஹரிப்பிரியா என்ற மாணவி தனது சேமிப்பு பணத்தில் புதிதாக வீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டியுள்ளார். தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு தொட்டியினை, அனைவரது வீடுகளிலும் கட்ட வேண்டும் என வலியுறுத்தியிருத்தி வருகிறது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் காரணமாக, தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஹரிப்பிரியா, தன் பெற்றோர் கொடுத்த பணத்தை சேமித்து வைத்து தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி தற்போது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
Discussion about this post