விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வளவனூர், அரசு கோழியனூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயத்திற்கான சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post