அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்திருந்தது. ஆனால் வட மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவியது. அனல் காற்று காரணமாக பொது மக்கள் வெளியே வர அஞ்சினர். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பகல், கருமேகங்கள் கூடி மழை பெய்தது. இந்த திடீர் மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே இந்த மழை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post