தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் எனவும், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post