மழை பெய்து வெப்பம் தனிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கடந்த சில தினங்களாக வெயிலும், அனல் காற்றும் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், நேற்று மேல்மலையனூர், வளத்தி, அவலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. வெப்பம் சற்று தனிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version