தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரியில் 6 சென்டி மீட்டர் மழையும், கூடலூர் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்றும் கூறியுள்ளது.
Discussion about this post