தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலையிலோ அல்லது இரவிலோ லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக மதுரை மாவட்டம் மேலூரில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஆகிய இடங்களில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Discussion about this post