மழையில் நனைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? என்னங்க சொல்றீங்க!

மழை வரும் போது மயில் ஆடும் குளிர் வரும் போது குயில் பாடும் அதுபோலவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மழை என்றால் யாருக்குதான் புடிக்காது.  அதிலும் மழையில் நனைவது என்பது அனைவருக்கும் பெரும் ஆசையாக இருக்கும். மழை வரும் அறிகுறி வந்தாலே நாம் நம் சிறுவயதில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு மேகம் கருக்குது பாட்டிற்கு நடனம் ஆடி இருப்போம். அதுலாம் ஒரு காலம்! ஆஹா.. நினைக்கவே குதுகலமாக இருக்கிறது அல்லவா. அத்துடன் சுட சுட டீ அதனுடன் இளையராஜா பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும். இதுவெல்லாம் ஒரு புறம் நியாபகம் வந்தாலும்  மறுபுறம் மழை வந்தால் அம்மா நம்மிடம் கத்திக்கூப்பிடுவது மழை வருது வெளிய போகதே, சளி பிடித்து விடும் என்ற குரலும் கண்டிப்பாக கேட்டு இருக்கும்.

இந்நிலையில் மழையில் நனைந்தால் நன்மை என்று சொன்னால் எவ்வளவு நல்லா இருக்கும் இல்ல.. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கே என்று பலரும் நினைப்பார்கள். இதுபோலவே சமீப காலமாக மழையில் நனைவது நன்மை தரும் என்றும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்றும் பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று  தொற்றுநோயியல் நிபுணர்கள் அதன் உண்மை தன்மையை பற்றி கூறுகின்றனர்.

மருத்துவர்கள் கூறுவது:

பொதுவாக, மழைக்காலமும் ஃப்ளூ காய்ச்சல் பரவும் காலமும் ஒருசேர வரும். அப்போது மழையில் நனைந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் மழையில் நனைவது மட்டுமே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது,” என்கிறனர். அதேபோல், மழைக் காலத்தில் பூஞ்சைகளால் ஏற்படும் ஒவ்வாமைகளும், மைட்ஸ் எனப்படும் ஒருவகை பூச்சியால் ஏற்படும் ஸ்க்ரப் டைஃபஸ் பரவும் வாய்ப்புகளும் உள்ளன என்று கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுமா!

பொதுவாக மழையில் நனைவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெருகிறதாக கூறப்படும் கருத்துகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்கின்றனர் மருத்துவத்துறையினர்.  “பொதுவாக வெறும் மழைநீரால் பாதிப்பும் இல்லை பயன்களும் இல்லை,”. வெறும் மழைநீரால் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியாது என்று கூறினார். ஆனால், “மழைக்காலத்தின்போது நாம் எதிர்கொள்ளும் நோய்க்கிருமிகளைச் சமாளிப்பதன் மூலம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும் மழை நீரானது காரத்தன்மை உடையது என்றும் அதனால் மழை நீர் சருமத்திற்க்கும், தலை முடுக்கிற்கும் நல்லது என்று தெரிவித்தனர். இயற்கை மருத்துவதில் நீர் சிகிச்சை என்ற முறை உள்ளதாக கூற்கின்றனர். அந்த முறையானது வெறும் நீரை மட்டுமே வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறுகின்றன. பொதுவாக மழை நீர் குளிர்ச்சியாக இருப்பதால் அதில் நனைவது என்பது பொதுவாகவே சுவாசமும், ரத்த ஓட்டமும் சீராக இருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிகின்றனர். ஆனாலும், நீண்ட நேரம் மழையில் நனைவதும், ஈரப்பதத்திலேயே இருப்பதாலும் தொற்றுக்கிருமிகளால் நோய் பரவும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்படி உங்களுக்கு மழையில் நனைய வேண்டும் என்று ஆசை இருந்தால் நனைந்த உடன் வீட்டிற்கு வந்து வெது வெதுப்பான தண்ணீரில் குளித்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி  உள்ளனர்.

 

Exit mobile version