தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், சிவகங்கை உள்பட 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை நகரில் இன்று காலை லேசான மழை பெய்தது. மேக மூட்டத்துடன் இதமான சூழல் நிலவுகிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Discussion about this post