விமான நிலையங்களை போன்று ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 385 கோடி ரூபாய் செலவில் விமான நிலையத்தை போல் 202 ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ரயிலில் பயணம் செய்ய இருக்கும் பொதுமக்கள், ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில் நிலையத்திற்கு வந்து தங்களின் உடமைகளை சோதனைக்குட்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கும் ரயில்வே பாதுகாப்பு படையின் இயக்குநர் அருண் குமார், முக அடையாளங்கள் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் விதமாக நவீன கண்காணிப்பு கேமராக்களும் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post