காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் நவ. 11ந் தேதி முதல் ரயில் சேவை

காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் நவம்பர் 11ந் தேதி முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அப்பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அப்பகுதிகளில் ரயில் சேவையை தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக, காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் நிலவும் களநிலவரங்கள் குறித்து 3 நாட்கள் ரயில் அமைச்சகம் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. அதன் பின் காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் நவம்பர் 11ந் தேதி முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version