ரயிலில் பயணிகளிடம் திருடப்பட்ட சுமார் 257 சவரன் தங்க நகைகள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட தங்க நகைகள், செல்போன் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட உரிமையாளர்கள் பலர் தங்களது பொருட்களை அடையாளம் கண்டு மீட்டுச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே ஐ ஜி வனிதா, 257 சவரன் நகைகள், 336 செல்பேசிகள், 3 மடிக்கணினிகள், இரண்டரை லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார். பொருட்களை இழந்த ஒரு மாதத்தில் ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர் அதிரடியாகச் செயல்பட்டு பொருட்களை மீட்டிருப்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் பாராட்டினர்.
Discussion about this post