பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் 104 ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாலும், புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு முடிவடைந்து விட்ட நிலையில், 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே, அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும். கடல் நீரால் அரிப்பு ஏற்படாத வகையில், துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு, புதிய பாலம் கட்டப்படுகிறது. இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post