பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கிய நிலையில், லாகூரில் இருந்து புறப்பட்ட ரயில் அட்டாரி எல்லையை அடைந்தது
இந்தியாவின் டெல்லிக்கும் – பாகிஸ்தானின் லாகூருக்கும் இடையே சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்ததால் ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. லாகூரில் இருந்து புறப்பட்ட ரயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையை வந்தடைந்தது. பதற்றம் காரணமாக குறைந்த அளவிலான பயணிகளே ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.