மத்தியப் பிரதேசத்தில் வருமான வரித்துறை நடத்திய இரண்டு நாள் சோதனைகளின் மூலம், முறைகேடாக நடைபெற்ற 281 கோடி ரூபாய் பணபரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் கூறியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹவாலா வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு பணி அதிகாரி, முன்னாள் ஆலோசகர் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சிறப்பு பணி முன்னாள் அதிகாரி பிரவீன் காகட் வீட்டில், டெல்லியிலிருந்து வந்த வருமான வரித்துறையினர், காவல்துறை அதிகாரிகள் 200 பேர் அடங்கிய குழுவினர், அதிகாலை 3 மணி அளவில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற 2 நாட்கள் சோதனைகளின் மூலம், முறைகேடாக நடைபெற்ற 281 கோடி ரூபாய் பணபரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில், வியாபாரிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரிடம் இருந்து அந்த பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Discussion about this post