பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிக்கும் விதமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், கங்கை குடிநீர் திட்டம் உள்பட இரண்டாயிரத்து 980 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், நாடாளுமன்ற விவாதங்களுக்கு பயந்து, தமக்கு பதிலாக நிர்மலா சீதாராமனை நியமித்ததாக ராகுல் காந்தி விமர்சித்ததாக சுட்டிக் காட்டினார்.
எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் உரிய பதிலடி கொடுத்ததாக பெருமிதத்துடன் கூறிய பிரதமர் மோடி, ஆனால், நிர்மலா சீதாராமன் குறித்த ராகுல் காந்தியின் மோசமான பேச்சு, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Discussion about this post