கடந்த 5 ஆண்டுகளில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு, 69 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு, சகோதிரி ப்ரியங்கா காந்தியுடன் நேற்று கேரளாவுக்கு வந்த ராகுல் காந்தி, வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் வேட்புமனு சார்ந்த விவரங்கள் வெளிவந்தன.
அதில் ராகுலின் மொத்த சொத்து மதிப்பு 15 கோடியே 90 லட்சம் ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், அசையும் சொத்துக்களின் மதிப்பு 5 கோடியே 8 லட்சம் ரூபாய் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு 10 கோடியே 8 லட்சம் ரூபாய் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, ராகுல் காந்தி தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, 69 சதவீதம், அதாவது 9 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவிற்கு, சொத்து மதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இதில் அவருடைய ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு 1 கோடியே 32 லட்சம் ரூபாயில் இருந்து 10 கோடியே 80 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுதவிர, 333 புள்ளி 3 கிராம் தங்க நகைகளையும் கைவசம் வைத்துள்ளதாக வேட்புமனுவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post