மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. கட்சித்தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை மற்ற கட்சிகளின் மீது குற்றசாட்டுகளை முன் வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
‘Modilie’ is a new word that’s become popular worldwide. Now there’s even a website that catalogues the best Modilies! https://t.co/Ct04DlRsj3
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2019
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், “modilie” என்ற பெயரில் பதிவு ஒன்றையும், அந்த வார்த்தையை டிக்சனரியில் தேடுவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். மேலும், அதில் பிரதமர் மோடியை குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், இந்த வார்த்தை தற்போது பிரபலமாகி வருவதாகவும் கூறியிருந்தார்.
We can confirm that the image showing the entry ‘Modilie’ is fake and does not exist in any of our Oxford Dictionaries.
— Oxford Dictionaries (@OxfordWords) May 16, 2019
இந்நிலையில் “modilie” என்ற வார்த்தை டிக்சனரிலேயே இல்லை என்பதை ஆக்ஸ்போர்டு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த வார்த்தைகளைப் பற்றி அந்நிறுவனம் தானாகவே முன்வந்து விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post