அனுமதியின்றி பேனர் வைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி நகரில் காங்கிரஸ் சார்பில் 7 இடங்களில் பிரசார பேனர்கள் வைக்கப்பட்டன. அவற்றில், ஒரு பேனர், கட்டிடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த பேனர்களில், ராகுல் காந்தியின் புகைப்படம், காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அந்த பேனர்களை வைப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா? என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியினரால் எந்த அனுமதிச் சான்றையும் அளிக்க முடியவில்லை.
இதையடுத்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. புகார் தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்கவில்லையெனில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post