டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதால் அதில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் உடன் நடைபெற உள்ள போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தொடர் நடக்க கால அவகாசம் உள்ளதால் ஜடேஜா அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
Discussion about this post