மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்று அமேதி தொகுதியில் வெல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை இன்று துவக்கி வைக்கிறார். அதேபோன்று ராகுல் காந்தியும், தன் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். 2 பேரும் லக்னோ விமான நிலையத்தில் அடுத்தடுத்து 20 நிமிட இடைவெளியில் வந்திறங்குகின்றனர். விமான நிலையத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், காங்கிரஸ், பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post