ஒரு க்ளாஸ் மது 2600 ரூபாய்! சிங்கப்பூரின் ஸ்லிங் பானம்!

போதை கனமே! கனமே..போகாதெனில்!!

மகிழ்ச்சி, சோகம், துக்கம் என பல்வேறு வகையான உணர்ச்சிகளுக்கு இன்றைய மனிதர்களின் மிகப்பெரிய ஆறுதல் என்றால் அது மதுதான். மேலை நாடுகளில் கொண்டாட்டங்களின் போது அவர்களின் மகிழச்சியை வெளிப்படுத்தும் விதமாக மதுபானங்களை குடிப்பார்கள். ஆனால் தற்போது உள்ள கால சூழ்நிலையில் எல்லா வகையான விஷயங்களிலும் இந்த நண்பர் இருப்பார். அது வேறு யாரும் இல்லை இந்த மதுபானங்கள் தான். ஏனென்றால் அவர்களுடனான எல்லா செயல்களிலும் மதுக்களின் பங்கு இல்லாமல் இருக்காது. மதுக்களில் பலவகை மதுபானங்கள் உள்ளன. அதை சொன்னால் கொஞ்சம் லிஸ்ட் பெருசா போகும் சில வகைகள் விட்டு கூடா போகலாம். ஆனால் முதன் முதலில் இந்த  மதுக்கள் எப்படி தோன்றியது என்பதில் ஓர் பெரிய வரலாறே உள்ளது அது சிலருக்கு தெரிய வாய்புள்ளது.

மதுவின் வரலாறு:

முதன் முதலில் சிந்து சமவெளி நாகரிகத்தின் போதுதான் இந்தியாவில் மதுபானங்கள் தோன்றின. கி.மு.4000-இல் எகிப்திய ஓவியங்களில் ஒயின்கள் வரையப்பட்டுள்ளன.  ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து சீனாவில் பல்வேறு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிமு 55 இல் ரோமானியர்கள் ஐரோப்பியர்களுக்கு பீர் வகைகளை அறிமுகப்படுத்தினர். கி.மு 2000-ம் ஆண்டுகளிலேயே ஒயின் தயாரிக்கும் முறையானது ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடைக்காலங்களில் ஒயின் அனைவருக்கும் விருப்பமான பானமாக மாறியது.  மதுஅருந்துதல் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக தொடங்கியது. ஆனால் இன்று உலகிலுள்ள மக்களுக்கு மதுபானங்களை தெரியாதே ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள  ஒரு மதுபான வகை அந்நாட்டு மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் மதுவாக உள்ளது. இந்த மதுவானது ஒரு நாளைக்கே இரண்டு லட்சம் ரூபாய் முதல் வருமானம் ஈட்டுவதாக கூறுகின்றனர்.

ஒருநாளைக்கே இவ்வளவு வருமானமா..!

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தனக்கென ஒரு பாரம்பரிய மதுபான வகையை ஒன்றை வைத்துள்ளனர். அந்த வகையில் சிங்கப்பூரிலும் சிறப்பு மிக்க மக்களால் கொண்டாடக்குறிய மதுபானவகை உள்ளது. அந்த வகையானது 1915 எனப்படும் சிங்கப்பூர் ஸ்லிங் வகையாகும். இந்த வகை மதுபானமானது கியாம் டாங் பூன் என்ற மதுபான விற்பனையாளரால் 1915-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை மதுபானமானது காக்டெய்ல் வகையை சார்ந்தது.   இந்த மதுபானம் முதலில் பெண்களுக்காகதான் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கியாம் டாங் பூன்  அனைவரும் விரும்பி குடிக்கும் விதமாக பலதரப்பட்ட பானங்களை ஒன்று சேர்த்து சிங்கப்பூர் ஸ்லிங் உருவாக்கப்பட்டது. இந்நிலையில்,  இந்த பானம் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாக மாறி, அந்நாட்டின் தேசிய மது வகை என்ற புகழையும் பெற்றது. இந்த மதுபானம் பார்ப்பதற்கு லைட் லிங் நிறத்தில் இருக்கும்.

இந்த சிங்கப்பூர் ஸ்லிங் பானம் தற்போது அந்நாட்டில் பிரபலமான ராஃபெல்ஸ் ஓட்டலில் பரிமாறப்படுகிறது.  இது 100-ஆண்டுகளை தாண்டி பாரம்பரிய பானமாக இருந்து வருகின்றது. இந்த சிங்கப்பூர் ஸ்லிங் பானத்தின் ஒரு க்ளாஸ் விலை 29 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2,400 ரூபாய் ஆகும்.  ஒரு நாளைக்கு 1,000-த்திற்கும் மேற்பட்ட க்ளாஸ்கல் விற்கப்படுமாம். அப்படி பார்த்தால் தினசரி வருமானம் மட்டுமே 2.38 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் என்று கூறுகின்றனர். இந்த வகை மதுபானமானது ராஃபெல்ஸ் ஓட்டலில் மட்டுமே விற்கப்படுமாம். இவற்றிற்கு வேறேங்கும் கிளைகள் கிடையாது. இந்த செய்தியானது தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. மக்களிடையே பெரிதும் கவனம் பெற்றுள்ளது என்றும் சொல்லலாம்.

 

Exit mobile version