ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தோமஸ் பெர்டிச்சை வீழ்த்தி உலகின் 2-ம் நிலை வீரர் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-ம் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரும் ஸ்பெயினை சேர்ந்தவருமான ரஃபேல் நடால் செக் குடியரசின் தோமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6க்கு பூஜ்ஜியம், 6க்கு 1, 7க்கு 6, என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ரஃபேல் நடால், காலிறுதியில் அமெரிக்காவின் ஃப்ரான்ஸஸ் டியாஃபோவை எதிர்கொள்ள உள்ளார்.
Discussion about this post