விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
2016ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுகவை சேர்ந்த ராதாமணி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராதாமணி, உடல்நிலை மோசமானதையடுத்து சில தினங்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். ராதாமணி மறைவை தொடந்து சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏக்களின் பலம் 100 ஆக குறைந்துள்ளது.
Discussion about this post