பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பாட புத்தகங்களை விநியோகிப்பதில் சிரமம் உள்ளதாகவும், குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படுமெனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 36 லட்ச ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாது என்றும், பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
Discussion about this post