உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்கிறது. இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Discussion about this post