உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாதனை படைத்தார். இந்தியாவிற்கு முதல்முறையாக தங்கம் வென்று நாட்டிற்கு திரும்பியுள்ள பி.வி.சிந்து, பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும், விளையாட்டு துறை அமைச்சர் மத்திய அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை தன் குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். ஐதராபாத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.