சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் புழல் ஏரி 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 டி.எம்.சி. கொள்ளளவை எட்டியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியில் முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டதையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்குப் பின் 2 டி.எம்.சி கொள்ளளவை எட்டியுள்ளது.
இதற்கு முன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 460 கனஅடியாகவும் உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 89 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அடுத்தாண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், புழல் ஏரி நீர் தேவையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post