எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசித்துவரும் 29 வயதான எழுத்தாளர் சபரிநாதன், கவிதை, மொழிபெயர்ப்புகள், திறனாய்வுகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து எழுதிவருகிறார். 2016ஆம் ஆண்டில் வெளியான இவரின் ‘வால்’என்ற கவிதைத் தொகுப்புக்காக, சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர், சென்னை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். முன்னதாக 2017ல் விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதையும், 2015 மற்றும் 2011ல் இளம் கவிஞர்களுக்கான விகடன் விருதையும் இவர் பெற்றுள்ளார். அதே போன்று, சாகித்ய அகாதமியின் குழந்தை இலக்கியத்திற்கான பால புரஸ்கார் விருதைப் கவிஞர் தேவி.நாச்சியப்பன் பெறுகிறார். இவரின் ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மறைந்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகளான இவர் தனது தந்தையைக் குறித்து நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் என்ற நூலையும் எழுதி உள்ளார்.
Discussion about this post