ஈரோட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி ஈரோடு மாநகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்படுள்ளது. இதனை சட்டமன்ற உறுப்பினர் கே.வி ராமலிங்கம், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 20 லிட்டர் குடிநீர் 7 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும், இந்த திட்டத்தின் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க வழிவகுக்கும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தெரிவித்தார்.
Discussion about this post